இலங்கையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டங்களில் முல்லைதீவும் ஒன்றாகும் இது கொழும்பிலிருந்து இதன் தூரம் 329.3மஅ ஆகும் இங்கு வரலாற்றுச்சிறப்புமிக்க பல இடங்கள் உள்ளன அவற்றில் முல்லைதீவுக்கோட்டையும் ஒன்றாகும் இது தற்போது முல்லைதீவு மாவட்டசெயலக வளாகத்தில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இன்று ஒரு பக்கசுவர் மட்டுமே எஞ்சியுள்ளது
முல்லைதீவுக்கோட்டை என்பது முல்லைதீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்டகோட்டையாகும்.1715ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் மரத்தாலும் மரவேலிகளாலும் கட்டப்பட்டகோட்டையாகும்.1721ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டையாகும்.கண்டிஇராச்சியம் செட்டிகளுடன் கொண்டிருந்த சட்டவிரோத வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒல்லாந்தரால் கட்டப்பட்டகோட்டையாகும்.இக்கோட்டையின் வரலாறு பற்றி நோக்கினால் பிரித்தானியரால் இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது 25 ஆவனி 1803 ல் பண்டாரவன்னியனால் இக்கோட்டை இடிக்கப்பட்டது இக்கோட்டையின் தளபதி கப்பிட்டன் வொன்டிpரிபேக் யாழ்கோட்டைக்கு தமது கோட்டையை இடமாற்றிதப்பியோடினர் அதனைத்தொடர்ந்து வொன் டிரிபேக்கினால் பண்டாரவன்னியன்படைகள் கச்சிலைமடு எனும் இடத்தில் 31 ஐப்பசி அன்று 1803 தோற்கடிக்கப்பட்டது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் சின்னம் தற்போது கவனிப்பாரற்றநிலையில் அழிவுறும் நிலையில் உள்ளது ஒரு பிரதேசத்தின் வரலாற்றுச்சின்னங்கள் அழிவுறும் போது அவ் பிரதேசத்தின் வரலாறுகள் பாதிக்கப்படும் அது நாடடீpன் வரலாற்றையே மாற்றியமைக்கும் எனவே இச் சின்னத்தின் எஞ்சியிருக்கும் பாகத்தையாவது பாதுகாத்து எதிர்வரும் சந்ததிக்கு கொடுக்கவேண்டியது இன்றையசந்ததியினராகிய எமது கடமையாகும் எனவே இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்
தொகுப்பு
க.சுஹாசினி
உசாத்துணை
hவவிஃஃவய.அ.றமைipநனயை.உழஅ

No comments:
Post a Comment