Saturday, July 1, 2017

சோழர்கால ஓவியக்கலை

 தென்னக வரலாற்றில் ஓவியங்களின் அதி உன்னத வளர்ச்சியை சோழர் காலத்தில் காணமுடிகிறது இக்காலத்தில் பிரமாண்டமான முறையில் கற் கோயில்கள் அமைக்கப்பட்டமையே இதற்கு காரணமாகிறது
ஆலயங்களில் கூரைதட்டைப்பகுதிஇ விமானங்களின்கீழ்ப்புறம்இ பிரகாரவெளிப்புறசுவர்கள்இ கற்பக்கிரகத்தின்வெளிச்சுவர்கள் ஆகியவற்றில் அதிகளவான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன நிகழ்வொழுங்கை பேணும் முகமாக கோயிலின் பிரதடசன ஒழுங்கில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள் பற்றி நோக்கினால் இராஜஇராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் உள்ள ஓவியங்கள் ஓவியக்கலையின் சிறப்புமிக்க வளர்ச்சியினைக்காணலாம்



 தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கருவறையைச்சுற்றி உள்ள சுற்றாலையின் இருபக்கங்களிலும் கவின்மிகு ஓவியங்கள் தீட்டப்hட்டுள்ளன இவ் ஓவியங்கள் பண்டைக்கால பல்லவரின் ஓவியக்கலை முறைக்கும் பிற்கால விஜய நகர கலைப்பண்புகளுக்குமிடையே முக்கியமானதொரு தொடர்பினை கொண்டதாக காணப்படுகிறது
ஒருபக்க சுவரின் சிறந்த ஓவியம் முதலில் உள்ளன சிவனின் யேகநிலையில் காலை மடித்து மான் தோலின் மீது யோக பட்டத்துடன் அமர்ந்துள்ளமை சிறப்பானது பிறிதொரு சுவரில் வேலைப்பாடுமிக்க ஒரு போர்வையும் நான்கு தந்தங்களையும் கொண்ட வெள்ளையானை நிற்கிறது அதன் மீது தாடியுள்ள ஒரு இளைஞன் அமர்ந்துள்ளான் அவன் பாடிக்கொண்டும் கையில் உள்ள தாளத்தினால் தாளம் போட்டுக்கொண்டும் சவாரி செய்கிறான் இதற்கு வலப்புறத்தில் விரைவதக பாய்ந்து செல்லும் குதிரை மீது நல்ல உடல் கட்டும் பெருமித்த தோற்றமும் உடைய ஒருவன் செல்கிறான் இது சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலைக்கு செல்லும் காட்சி என்று கலா விமர்சகர்கள் கருதுகின்றனர்
; இதற்கு அடுத்து வரையப்பட்ட ஓவியத்தில் மண்டபம் ஒன்றினுள் பல அந்தணர் நடுவே ஒரு கையில் தாளங்குடையுடன் மறுகையிர் ஓலைச்சுவடியை அவையோருக்கு காட்டியவ ண்ணம் கோவண உடையுடன் ஒரு முதியவர் நிற்கிறார் இது சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொண்டதை சித்தரிக்கிறது இவ் ஓவியத்திற்கு சிறிது தொலைவில் இராஜஇராஜசோழனும் கருவூர்த்தேவரும் இருக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது
வடபுற சுவர் முழுவதிலும் சிவபெருமான் ;;திரிபுரம் எரித்தகாட்சி சற்று விரிவாக காட்சிபடத்தப்பட்டுள்ளது இதுதவிர அன்றாட வாழ்வியல் நிகழ்வான பெணகள் சமைக்கும் காட்சி சிறப்பானது மேற்கண்ட சுவருக்கு எதிர்புறத்திலி அணிகலனுடனான பெண்களின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமன்றி கங்கைகொண்டஇசோழேச்சரம் இராஜஇராஜவிண்ணகரம் இலங்கை வானவன்மாதேவிஈச்சரம் போன்ற வற்றிலும் சோழர்கால ஓவியக்கலையின் சிறப்பை அறியலாம்





தொகுப்பு
க.சுஹாசினி

உசாத்துணை
1.திராவிட கட்டடக்கலை


No comments:

Post a Comment