Saturday, July 1, 2017

சேதுநாணயங்கள்

சேதுநாணயம் என்பது 13 தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினரால் வென்யிடப்பட்ட நாணயம் ஆகும் இதன் ஒரு பக்கத்தில் நின்ற நிலையிலான மனித உருவமும் அதன் இருபக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன மறுபக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான நந்தியும் 'செது' என்ற சொல்லும் மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளது.

சேது நாணயங்கள்
சேதுநாணயங்கள் இலங்கையின் வடபகுதியில் தென்னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது முன்னர் இந்த நாணயங்கலை யார் வெளியிட்டார்கள் என்று தெரியாமல் இருந்தபோது பலரும் பல்வேறு வகையில் கருத்துக்கலை முன்வைத்திருந்தனர் இவை சோழ மன்னர்களால் வெளியிடப்பட்டவை என்றும் சிலரும் சிங்கள மன்னர்  பராக்கிரமபாகுவால் வெளியிடப்பட்டவை என்று சிலரும் இராமநாதபுரத்து சேதுபதிகளால் வெளியிடப்பட்டவை என வேறு சிலரும் கருதினர்
1920ல் ஞானப்பிரகாசர் இது யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்டவை என்பவை சான்றுகளாகும் விளக்கினார் 1929 ஆம் ஆண்டு இலங்கையில் நாணயங்களை     பற்றி நூல் எழுதிய கொட்ரிங்கள் ஏன்பாரும் 1978ல் கீழைத்தேச நாணயங்களை பற்றி நூல் எழுதிய மிஞ்சினர் என்பவரும் இந்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசர்களால்  வெளி;யிடப்பட்டவை எனலாம் கருத்தயே கொண்டிருந்தனர்.



இதுவரை கிடைத்த நாணயங்களில் இருந்து இவை இரண்டு தொடர்களாக வெளியிடப்பட்டுள்ளமை தெரி;யவந்துள்ளது முதல் தொகுதி 13ம் நூற்றாண்டு முதல் 1450 வரையான ஆண்டு அடுத்து 1467ல் யால்ப்பாண அரசை மீண்டும் ஆரியச்சக்கரவர்த்திகள் கைப்பற்றிய பின் வெளியிடப்பட்டவை என்பனவாகும
1970களிள் பிற்பகுதியில் சி.பத்மநாதன் இந்த நாணயங்களை பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்கள் இவர் தனக்குக்கிடைத்த நாணயங்களை அவற்றின் தோற்றம். சின்னங்கள். குலைநயம் போன்றவற்றின் அடிப்படையில் ஆறுவகைகளாக பிரித்தார் இவருக்கு பின்னர் ப.புஷ;பரட்ணம் அவரது கள ஆய்வால் கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்களை ஆராய்ந்து அவற்றை பத்து வகையாக பிரித்தா
இவற்றில் உள்ள சின்னங்களாக மனிதஉருவம்இநிறைகுடம் ;சந்திரன காளையுருவம்;;; சேதுஎன்னும்மொழி குத்துவிளக்கு பூரணகும்பம் திரிசூலம பீட்த்துடன்குத்துவிளக்கு வேல் கிளைகளுடன்மரம் வச்ராயுதம் சூரியன் எட்டுஇதழ்கொண்டதாமரை மயில் என்பன காணப்படுகிறது
மேலும் வெள்ளி செப்பு தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதை அறியலாம் இவை வட்ட வடிவ நாணயங்களாகும் தொகுப்பு




க.சுஹாசினி
உசாத்துணை

1.பூநகரி தொல்லியல் ஆய்வு;



No comments:

Post a Comment