அமைக்கப்பட்டிருந்தது இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் காலத்தில் நாகர் குல மன்னர்களின் செல்வாக்கு களனிஇநாகதீபம் போன்ற பகுதிகளில் இடம்பெற்றது போன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் அவர்கள் செல்வாக்கு இடம் பெற்றுள்ளதை ஆய்வுகள் முலம் அறியலாம்.
இவ்வாறு நாகர்களின் செல்வாக்கு காணப்பட்டதன் விளைவாக நாகர் குல மன்னன் நாகராஜன் குருந்தனூர் மலையின் உச்சியில் ஒரு தேர் ஒட்டப்பட்டிருப்பதாகலாம் இன்றும் தண்ணிமுறிப்பில் வீதி ஒன்றாகும் சிவாலயம் அமைந்து வழிபட்டனர் இக்கோவிலில் இருந்து ஏழுவிதிகளால் தேர் ஓடும் வீதி என்ற பெயர் புழக்கத்தில் காணப்படுகின்றமை இதற்கு சான்றாகும்.
1982ம் ஆண்டு பேராசிரியர்; பத்மநாதன் குருந்தனார் மலைக்குச்சென்று ஆலயச ;சிதைவுகளாக பார்வையில் அப்பேதே அங்கு ஓர்கற் தூணில் .பிராமி எழுத்தினை மெழி பெயர்ப்பு செய்தார் அதில் வேள்நாதன் மகன் வேள் கண்ணன் எனக்குறிபிடப்பட்டுள்ளதாக பதிவு செய்தார் 1983ம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னியில் அதிகளவில் இந்துக்கேவில்கள் அழிக்கப்பட்டன ஒல்லாந்தர் ஆட்சியாளன் கப்டன் நாகொல்லு வன்னி நிர்வாகத்தை நேரடியாக நடத்தினான் இவனது காலத்தில் வன்னி பிரதேசத்தில் இருந்த அனைத்து சைவ கோவில்களும் இடிக்கப்பட்டன அதில் ஒன்று தான் குருந்தனூர் சிவாலயமாம்
இதன் கோவில் எச்சங்கள் பலவும் மலையின் உச்சியில் காணப்படுகின்றது மேலும் இக் கோவில் பற்றி கலாமணி சி தெய்வநாயகம் பிள்ளை 1982ல் வரலாசிறியர் பேராசிரியர்கலான இந்திரவாலாஇ ரகுபதி.இ சிற்றம்பழம் போன்றோருடன் அந்த மலைக்கு சென்றதாகவும் இது மிகவும் வனப்புடன் காணப்பட்டதாகவும் மலையின் அடியில் இருந்து உச்சிவரைகருங்கற்படிகள் காணப்பட்டதாகவும் மலையின் உச்சியில் அழிவுற்ற சிவன் கோவிலுக்கான கற்தூண்இ கோமுகிஇ கருங்கற் பலகையிலான பீடங்கள் போன்ற எச்சங்கள் காணப்பட்டதாக கூறுகின்றார்
1982ல் இலங்கை இந்துக்கலாச்சார திணைக்கலத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டது இடப்பெயர்வின் முன் வன்னி வாழ் மக்களின் சுற்றிலா தளமாகவும் இது விளங்கியது ஆனால் இன்று போரின் பின் ஆலயத்தின் சிதைவுகள் மலையின் பின் சிதறி காணப்படுவதுடன் ஆலயத்தின் தொண்மங்கள் சிலவும் திருடப்பட்டுள்ளன அதாவது ஆலயத்தின் உச்சியில் குழிகள் தோண்டப்பட்டு புதையல்கள் எடுக்கப்பட்டுள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் அழிந்து வருவது வேதனைக்குறிய விடையமாகும் மாறிவரும் உலகில் மாற்றங்கள் தேவை என்பதற்காக எமது கலாச்சார சின்னங்கள் முற்று முழுதாக அழிவது அனுமதிக்க முடியாத ஒன்றாகும் எனவே உரியமுறையில் தொல்லியல் மேலாய்வு அகழாய்வு மேற்கொண்டு இந்த முக்கியத்துவத்தை பறை சாற்ற வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்கலத்திற்கு உண்டு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் தொல்லியல் திணைக்கலத்திற்குறிய இடம் என்று இங்கு பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது இது மட்டும் திணைக்கலத்தின் கடமை அல்ல இதனை உறிய முறையில் பாதுகாக்காவிடின் இப் பதாகை மட்டுமே காலப்போக்கில் எ..சும் என்பது கவனத்தில் கொள்ளக்கூடிய விடையமாகும்.
தொகுப்பு
க.சுஹாசினி
உசாத்துணை
''ஈழத்துசிவாலயம்' இந்துகலாச்சாரதினைக்களம்



No comments:
Post a Comment