தேவநம்பியதீசனின் தந்தை முடசிவன் ஆவான். அவனது தாய் யாரென்பதை பற்றி வரலாற்று நூல்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தேவநம்பியதீசனுக்கு ஒன்பது சகோதரர்களும்இ இரண்டு சகோதரிகளும் இருந்தனர். தீசன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை ஆவான். அரசனாவதற்கு முன்னர் அவனது பெயர் தீசன் என்பதாகும்.
முடசிவனுக்குப் பின் தீசன் அரசனானன். அக் காலத்தில் வட இந்தியா அசோகப் பேரரசனால் ஆட்சி செய்யப்பட்டது. தீசன் அரசன்ன பின்னர் அசோகப் பேரரசனிடம் ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். ஆரிட்டன் அக்குழுவின தலைவனாவான். ஆக்குழு இலங்கைககுத் திரும்பி வருகையில் தீசனின் முடிசூட்டு விழாவிற்கு தேவையான பொருட்களை அசோகன் அனுப்பி வைத்தான் . அசோகப்பேரரசனின் அறிவுறைப்படி தீசன் முடிசூட்டு விழாவை நடாத்தினான் .அசோகமன்னன் பயன்படுத்திய 'தேவநம்பிய' என்ற மதிப்பிற்குறிய பெயரை பிற்காலத்தில் மன்னன் தீசனும் பயன்படுத்தினான் . அப்பெயரின் கருத்து கடவுளுக்கு பிரியமானவன் என்பதாகும்
அசோக மன்னனின் மகனான மகிந்ததேரர் தலைமயிலான பிக்குமார் குழு பௌத்த சமயத்தை இலங்கையில் பரப்புவதற்கு வந்தது தெவநம்பியதீசன் இலங்கையை அட்சி செய்த காலத்திலாகும் ;. இது நிகழ்ந்து புத்தபெருமான் பரிநிர்வாணமடைந்து 237 ஆண்டுகளுக்குப் பின்னராகும் தேவநம்ரியதீசன் மகிந்த தேரர் உள்ளிட்ட குளுவினரை மரியாதையுடன் வரவேற்றான் புத்த சமயம் இந்நாட்டில் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அரசன் அறிவுடையவனாக இருக்க வேண்டும் என்பதை மகிந்த தேரர் அறிந்திருந்தார்
தேவநம்பியதீசினால் மேற்க்கொள்ளப்பட்ட சமயப்பணி பற்றி நோக்கினால மகிந்ததேரர் குழுவினர் தங்குவதற்கு மகாமேகவனப்பூங்காவினையும் திஸராம என்ற பெயரில் விகாரையும் அமைத்து கொடுத்தான் அனுராதபுரத்தில் தூபராம மற்றும் தானம் பெறுவதற்கான மகாவலி எனும் தான சாலையையும் நிறுவினான்.
மேலும் பிக்குமார்கள் கல்வி கற்பதற்காக பிரிவெனாக்கள் சிலவற்றை கட்டியதுடன் மகாவிகாரை பிரதேசத்தை பௌத்த சங்கத்தினருக்கு வழங்கினார் இவரது ஆட்சிக்காலத்திலேயே புனித வெள்ளரசுக்கிளை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது மேலும் இவரது முக்கிய செயற்பாடாக அனுராதபுர நகரை எல்லைகலை அடையாளப்படுத்தினார் மேலும் பிக்குசாசனம். புpக்குனிசாசனம். ஆகியவற்றை நிறுவியதுடன் இலங்கையின் விவசாயம் மேற்பட்டிருந்தன திஸ்ஸவாவி கட்டியதுடன் பெரகரா. வெஷhக். ஊபசம்பத விழா பேன்ற சடங்குகலை அறிமுகப்படுத்தினார்.
இலங்கையின் அரசமதமான பௌத்தமதத்தினை அறிமுகப்படுத்தி துரநோக்கிலான அரசியல். சமயம். பொருளாதாரம் போன்றவற்றை கட்டியெலுப்பிய இலங்கையின் தலைசிறந்த மன்னனாகவும் இலங்கையின் தலைசிறந்த மன்னனாக இலங்கையின் 1வது பௌத்த மன்னனாக தேவநம்பியதீசன் காணப்படுகின்றான்.
தொகுப்பு
க.சுஹாசினி
உசாத்துணை
தரம்.10 பாடநூல்https://youtu.be/wrvTFgveiOM
;



Nallathu
ReplyDeletePubda
ReplyDeleteநல்லது வாழ்த்துக்கள்
ReplyDelete